Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயிலில் பாம் இருக்கு… கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவல்… தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீஸ்.. ரயில் நிலையத்தில் பரபரப்பு..!!!

ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததால் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சென்னைக்கு நேற்று குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயிலில் வெடிக்குண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதன் பேரில் ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டார்கள். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ரயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

சோதனைக்கு பிறகு ரயிலில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டார்கள். இரவு 07.50 மணி முதல் ஒரு மணி நேரமாக நடந்த சோதனையில் வெடிக்குண்டு எதுவும் இல்லை. இதன் பின்னரே வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. இதனால் தாம்பரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |