செல்போன் வியாபாரிகளிடம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திடீர் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாலிக், அப்துல்லா, செல்லா, சித்திக் உள்ளிட்ட நான்கு பேரும் சென்னையில் உள்ள மலையப்பன் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி அங்கிருக்கும் பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் சென்ற 13ஆம் தேதி மர்ம கும்பல் என்.ஐ.ஏ அதிகாரிகள் போல நடித்து இவர்களின் வீடு மற்றும் கடமைகளில் சோதனை மேற்கொண்டு அங்கே இருந்த 30 லட்சத்தை கொள்ளையடித்து சென்று விட்டார்கள். எடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தார்கள்.
இந்த நிலையில் வேலு, ரவி, விஜயகுமார், தேவராஜ், புஷ்பராஜ், கார்த்திக் உள்ளிட்ட ஆறு பேர் சென்ற 19ஆம் தேதி சென்னை சார்ஜ் நீதிமன்றத்தில் சரணடைந்தார்கள். இதையடுத்து நீதிபதி 14 நாட்கள் காவலில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் முகமது பைசல் என்பவரை போலீசார் கைது செய்தார்கள். கைதான 9 பேரிடமும் 1 கோடியே 65 லட்சம் மற்றும் ஆட்டோ, இரண்டு மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 9 பேரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள்.