சவுதி அரேபியாவில் வேலை செய்த தனது கணவரின் உடலை மீட்டு தர கோரி மனைவி ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முள்ளக்காடு சாமி நகரை சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவர் சவுதி அரேபியாவில் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இவரின் மனைவி ஜெயமாரி முள்ளக்காட்டில் உள்ள வீட்டில் வசித்து வந்திருக்கின்றார். இந்த நிலையில் ஜெயமாரிக்கு தனது கணவர் இறந்து விட்டதாக தகவல் வந்திருக்கின்றது. ஆனால் அவரின் உடல் அனுப்பி வைப்பது பற்றி எந்த விதமாக தகவலும் சவுதி அரேபியாவில் இருக்கும் நிறுவனம் தெரிவிக்கவில்லை.
இதனால் ஜெயகுமாரி மற்றும் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அதில் தனது கணவர் அந்தோணிராஜ் சென்ற ஆறு வருடங்களாக சவுதி அரேபியாவில் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் திடீரென சென்ற 16ஆம் தேதி அவர் உயிரிழந்து விட்டதாக தகவல் வந்தது. இது குறித்து நிறுவனத்திடம் கேட்ட போது அவர்கள் சரியான பதில் கூறவில்லை. ஆகையால் எனது கணவரின் உடலை கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.