உணவு நிறுவனங்கள் பதிவு சான்றை புதுப்பிக்க 31-ஆம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் வர்த்தக நிறுவனங்கள் கடைகள் பெயர் பலகைகளை தமிழில் கட்டாயமாக வைக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர மொழிகளில் எழுத்துக்களின் அளவு 5:3:2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.
மேலும் தமிழ் மொழி முதலிலும் ஆங்கிலம் அடுத்ததாகவும் பிற மொழி அதற்கு அடுத்ததாகவும் பெயர் பலகையில் இருக்க வேண்டும். அனைத்து கடைகளும் நிறுவனங்களும் அனைத்து ஊழியர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கை. ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் இதனை நடைமுறைப்படுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து வகையான உணவு நிறுவனங்களும் 1956 ஆம் வருடம் உணவு நிறுவன சட்டத்தின் கீழ் ஏற்கனவே தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பதிவு சான்றதழை புதுப்பிக்க வேண்டும். இதனை வருகின்ற 31 ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும். மேலும் இதுவரை பதிவு சான்று பெறாத நிறுவனங்கள் பதிவு சான்றிதழ்களை இணையதளம் மூலமாக பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
மேலும் ஏற்கனவே வழங்கப்பட்ட பதிவு சான்றிதனை 30.11.2022-க்குள் புதுப்பித்திருக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர் சட்டத்தின் கீழ் பதிவு சான்று உரிமைச் சான்று பெற்ற நிறுவனங்கள் உரிய காலத்திற்குள் புதுப்பித்துக் கொள்ளுமாறும் மேற்கொண்ட பதிவு சான்று மற்றும் உரிமைச் சான்றுகளை உரிய காலத்திற்குள் தொழிலாளர் துறை இணையதள மூலமாக குறிப்பிட்டு கொள்ளாத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.