திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.
தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் வினீத் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு குறித்து அரசு மருத்துவக் கல்லூரி டீன் முருகேசன் கூறியுள்ளதாவது, கொரோனா பாதிப்பு தற்போது இல்லை. இருப்பினும் தயார் நிலையில் இருப்பதற்கு ஆட்சியர் அறிவுறுத்தி இருக்கின்றார்.
100 படுக்கைகளுடன் அனைத்தும் தயாராக இருக்கின்றது. போதிய அளவு ஆக்சிஜனும் இருக்கின்றது. மேலும் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என அனைவரும் தயாராக இருக்கின்றார்கள். மருத்துவமனையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் ஏற்கனவே அமைக்கப்பட்ட கொரோனா சிறப்பு வார்டில் படுக்கைகள் அமைக்கப்பட்டு தற்போது நோயாளிகள் இருக்கின்றார்கள். கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் உடனடியாக அந்த வார்டை 100 படுக்கைகளுடன் சிறப்பு வாடாக மாற்றி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தயாராக இருக்கின்றோம். எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.