Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே.! யோகி பாபு வீட்டு விழாவில் அமைச்சர்… போட்டோ போட்டு ட்விட்…!!!

யோகி பாபு வீட்டு விழாவில் அமைச்சர் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருகின்றார் யோகி பாபு. திரை உலகிற்கு வந்த போது இவர் கடும் விமர்சனங்களை சந்தித்த நிலையில் தனது விடாமுயற்சியின் மூலம் காக்கிச்சட்டை, வேதாளம், ரெமோ , சர்க்கார் விஸ்வாசம் என பெரிய பெரிய திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வருகின்றார். இவர் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ், ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து தற்போது தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார்.

இந்த நிலையில் இவரின் குழந்தையின் பெயர் சூட்டல் மற்றும் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். இது குறித்த போட்டோக்களை அவர் சோசியல் மீடியாவில் அவர் பகிர்ந்து வாழ்க்கையில் வெற்றி பெறுவதை காட்டிலும் வாழ்க்கையை வெற்றி கொள்வதே சாமர்த்தியம் என்பதை நிரூபித்துள்ள நடிகர் யோகி பாபுவின் குழந்தைகளின் பெயர் சூட்டல் மற்றும் பிறந்தநாள் நிகழ்வின் மகிழ்வுடன் கலந்து கொண்டேன் என பதிவிட்டு இருக்கின்றார்.

Categories

Tech |