விஜய் -அஜித் யார் நம்பர் 1 ஹீரோ? என்பதற்கு த்ரிஷா பதில் அளித்துள்ளார்.
வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படமும் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அஜித்-விஜய் இருவரின் திரைப்படம் ஒரே நேரத்தில் வெளியாவதால் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் மோதிக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது த்ரிஷாவிடம் விஜய்-அஜித்தை விட பெரிய நட்சத்திரமாக கருதப்படுவதை பற்றி தனது கருத்தை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியுள்ளதாவது, உங்களின் கடைசி படம் நன்றாக இருந்தால் நீங்கள் நம்பர் ஒன்றாக பார்க்கப்படுவீர்கள். சிறிது காலத்திற்கு உங்களுக்கு ரிலீஸ் இல்லை என்றால் அந்த நிலையில் வேற யாராவது இருப்பார்கள்.
அஜித் விஜய்க்கு இடையே ஒருவரை ஒருவர் தேர்வு செய்ய முடியாது. நான் நடிப்பதற்கு வருவதற்கு முன்பாகவே அவர்கள் அனுபவமிக்கவர்களாக இருந்திருக்கின்றார்கள். அவர்களின் படங்களை ஒரு ஆடியன்ஸாக பார்க்கிறோம். தியேட்டரில் ஒருவரை தேர்ந்தெடுத்தால் அவர்கள் தங்கள் படங்களை பார்க்கும் மகிழ்ச்சிக்காக பார்க்கின்றார்கள். இருவரும் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்கள் தான். யார் பெரியவர் என நான் எப்படி கூற முடியும் என தெரிவித்துள்ளார்.