தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்க மீனா தலைமை தாங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரி வரவேற்றார். மேலும் பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட செயலாளர் முருகன் விளக்கமாக பேசினார். மேலும் இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர், செயலாளர் என பலர் பங்கேற்று பேசினார்கள்.
இந்தப் போராட்டத்தில் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நிறைவேற்ற வேண்டும் எனவும் காலமுறை ஊதியம், அகவிலை படியுடன் கூடிய குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், சத்துணவு மையங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.