முல்லைப் பெரியாறு அணை ஐந்தாவது முறையாக 142 அடியை எட்டிய நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாறு அணை இருக்கின்ற நிலையில் பருவமழை நன்றாக பெய்ததன் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. சென்ற மூன்றாம் தேதி அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியதால் கேரள எல்லை பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அணை நீர்மட்டம் 141.80 அடியாக இருந்த நிலையில் நள்ளிரவில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக நேற்று காலை 6 மணி அளவில் நீர்மட்டம் 141.95 அடியாக உயர்ந்தது.
இந்த நிலையில் காலை 10 மணி அளவில் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதனால் கேரளாவுக்கு இறுதி கட்டம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கின்றது. மேலும் தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது முறையாக அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது/ இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்க.ள் இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள பால்பட்டியை சேர்ந்த விவசாயிகள் அங்கு ஓடும் முல்லைப் பெரியாற்றில் மலர் தூவி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.