Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்.. கோரிக்கைகளை முன்வைத்த பஞ்சாயத்து தலைவர்…!!!

ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்தில் தினசரி சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்தில் செயல்படுத்தப்படும் அரசு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரை நகர பஞ்சாயத்து தலைவி கலாவதி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர், நிர்வாக அதிகாரி, பஞ்சாயத்து உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும் இவர்களுடன் தூத்துக்குடி மாவட்ட நகர பஞ்சாயத்துகளின் உதவி செயற்பொறியாளர் மாலா உள்ளிட்டோரும் வந்திருந்தார்கள். இதையடுத்து ஆட்சியர் நகர பஞ்சாயத்தில் நடந்து வரும் பணிகளை மேற்கொண்டார்.

அப்போது நகர பஞ்சாயத்து தலைவர் ஆட்சியரிடம் கூறியுள்ளதாவது, ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்துக்கு தனி குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டும். அலுவலகத்துக்கு எதிரே இருக்கும் குப்பைமேட்டை அகற்றிவிட்டு அந்த இடத்தில் தினசரி சந்தை அமைப்பதற்கான அனுமதி தர வேண்டும். காமராஜர் பூங்காவை புதுப்பித்து பராமரிக்க வேண்டும். அங்கு சுற்றி நடைபயிற்சி செல்ல வசதி செய்ய வேண்டும் என தெரிவித்தார். இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Categories

Tech |