செல்வராகவனின் ட்விட்டர் பதிவை பார்த்தவர்கள் விவாகரத்தா என கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.
தமிழ் சினிமா உலகின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் சென்ற 2006ம் வருடம் நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார். பின் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்தனர். பிறகு தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் செல்வராகவன் ட்விட்டர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் “தற்போது தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்” என பதிவிட்டிருக்கின்றார். இந்த பதிவிற்கு சிலர் உண்மைதான் எனவும் சிலர் என்ன ஆச்சு நீங்களும் விவாகரத்து செய்ய போறீங்களா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றார்கள். அண்மையில் இவரது தம்பியும் நடிகருமான தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து செய்த நிலையில் இவரின் பதிவை பார்த்தவர்கள் இந்த கேள்வியை எழுப்பி வருகின்றார்கள்.
தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்.
— selvaraghavan (@selvaraghavan) December 27, 2022