Categories
சினிமா தமிழ் சினிமா

போராடிக் கொண்டே இருங்கள்… நீங்கள் இன்னும் பலமாக தயாராவீர்கள்… உருக்கமாக பதிவிட்ட சமந்தா..!!!

சமந்தாவின் பதிவு ரசிகர்களிடையே ஆறுதல் அடைய செய்துள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் தற்போது மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் இவர் பேட்டி ஒன்றில் பேசியபோது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே நான் போராடிக் கொண்டிருக்கின்றேன். இருப்பினும் மனம் தளர மாட்டேன் என உருக்கமாகவும் தன்னம்பிக்கையுடனும் பேசி இருந்தார்.

இந்த நிலையில் பாடகி சின்மையின் கணவரும் நடிகருமான ராகுல் ரவீந்திரன், ” எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் நீ போராடிக்கொண்டே இருப்பாய். இன்னும் இன்னும் போராடிக் கொண்டே இருப்பாய். ஏனென்றால் நீ ஒரு இரும்பு பெண். உன்னை எதுவும் தோற்கடிக்காது. கஷ்டப்படுத்தாது. மாறாக அவை உன்னை இன்னும் சக்தி வாய்ந்தவளாக மாற்றும் என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த சமந்தா, நன்றி ராகுல். யாரெல்லாம் தங்கள் வாழ்க்கையில் போராடுகிறார்களோ அவர்களுக்கு இதனை சொல்லிக் கொள்கின்றேன். “போராடிக் கொண்டே இருங்கள்.! நீங்கள் இன்னும் பலமாக தயாராவீர்கள். இன்னும் திடமாக மாறி கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள்” என குறிப்பிட்டு இருக்கின்றார். இந்த பதிவானது தற்போது ரசிகர்கள் பலருக்கும் ஆறுதலாக இருக்கின்றது.

Categories

Tech |