கடலில் விழுந்த ஹீரோயினை ஜூனியர் எம்ஜிஆர் காப்பாற்றியதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் அவர்களின் அண்ணன் வழி வாரிசு ராமச்சந்திரன் என்ற ஜூனியர் எம்.ஜி.ஆர் தற்போது இரும்பன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா தாத்தா நடிக்கின்றார். மேலும் இந்த திரைப்படத்தில் யோகி பாபு, சென்ராயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றார்கள். இத்திரைப்படத்தை கீரா இயக்க ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கின்றார். இந்த நிலையில் படம் பற்றி இயக்குனர் கூறியுள்ளதாவது, இது நரிக்குறவர் சமுதாய இளைஞருக்கும் ஜெயின் சமூகத்தை சேர்ந்த பெண்ணுக்கும் இடையேயான காதல் கதை.
குடும்பத்தினர் அவளை சந்நியாசி ஆக்க முயற்சிப்பதால் அவளை அந்தமான் அழைத்துச் செல்லும் ஹீரோ அங்கு அவருக்கு வாழ்க்கையை புரிய வைப்பது தான் இந்த படத்தின் கதை. அந்தமான் கடல் பகுதியில் படப்பிடிப்பை நடத்தினோம். நடுக்கடலில் அவர் தற்கொலை செய்து கொள்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஹீரோயின் கடலில் குதிக்க இடுப்பில் ரோப் கட்டப்பட்டிருந்ததாலும் அலையின் வேகத்தால் படகு ஒரு திசைக்கு அவர் ஒரு திசைக்குமாக தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்து ஜூனியர் எம்.ஜி.ஆர் கடலில் குதித்து ஹீரோயினை காப்பாற்றினார். இந்த காட்சியை அப்படியே படத்தில் வைத்திருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.