நடிகை கனிகா கெத்து காட்டும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்தவர்தான் நடிகை கனிகா. இவர் மிஸ் சென்னை எனும் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றதால் திரையுலகில் நுழைய ஒரு காரணமாக இருந்தது. கடந்த 2002ஆம் வருடம் 5 ஸ்டார் திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான இவர் பின்னணி குரலும் கொடுத்துள்ளார். சச்சின் படத்தில் ஜெனிலியாவுக்கு குரல் கொடுத்தது இவர்தான்.
இவர் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தாலும் டாப் ஹீரோயின்கள் லிஸ்டில் இவரால் வர முடியவில்லை /இவருக்கு திருமணம் ஆகி 12 வயதில் மகன் இருப்பினும் இன்னும் தன்னை பிட்டாகவே வைத்திருக்கிறார். மேலும் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் அடிக்கடி வெளியிட்டுகின்றார்.
இந்த நிலையில் கனிகா தற்போது ஹார்லி டேவிட்சன் பைக்கில் ஏறி உட்கார்ந்து போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார். 40 வயதாகியும் இளம் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் வகையில் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் தற்போது இவர் எதிர்நீச்சல் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றார் குறிப்பிடத்தக்கது.