துணிவு திரைப்படத்தின் அப்டேட் இன்று வெளியாக உள்ளது.
வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று இருக்கின்றது.
ஏற்கனவே இத்திரைப்படத்திலிருந்து வெளியான சில்லா சில்லா பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதன்பின் இரண்டாவதாக வெளியான காசேதான் கடவுளடா பாடலுக்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது. இதைத்தொடர்ந்து மூன்றாவது பாடலான கேங்ஸ்டா பாடல் வெளியானது. சீண்டுனா சிரிப்பவன், சுய வழி நடப்பவன் என்ற வரிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கின்றது. இந்த நிலையில் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் துணிவு திரைப்படத்தின் போஸ்டரை பகிர்ந்து அமைதியாக இருங்கள், இது பெரியதாக இருக்கும்.. காத்திருங்கள் என பதிவிட்டு இருக்கின்றார். இதனால் துணிவு திரைப்படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
Sit tight, this is going to be big 😎 stay tuned to @zeestudiossouth 🙌#ThunivuPongal #Thunivu #NoGutsNoGlory#Ajithkumar #HVinoth@zeestudios_ @bayviewprojoffl @redgiantmovies_ @kalaignartv_off @netflixindia @sureshchandraa #RomeoPictures @mynameisraahul @GokulamMovies pic.twitter.com/fn7YFQINIX
— Boney Kapoor (@BoneyKapoor) December 29, 2022