நாக சைதன்யா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு அடுத்ததாக நாக சைதன்யா நடிக்கும் என்சி 22 திரைப்படத்தை இயக்குகின்றார். இத்திரைப்படத்தை ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்க தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகின்றது. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி செட்டி நடிக்கின்றார்.
மேலும் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றார்கள். இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்திருக்கின்றார்கள். அதன்படி வருகின்ற 2023 ஆம் வருடம் மே மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.