அஜித் ரசிகர்கள் கோரிக்கையை முன்வைத்து வருகின்றார்கள்.
வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படமும் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அஜித்-விஜய் இருவரின் திரைப்படம் ஒரே நேரத்தில் வெளியாவதால் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் மோதிக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நிலையில் அண்மையில் வாரிசு இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற போது விஜய் தனக்கு தானே போட்டி எனவும் வேறு யாரும் தனக்கு போட்டி இல்லை. இதனை விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாட அஜித் ரசிகர்களை சீண்டி இருக்கின்றது. சென்ற 20 வருடங்களுக்கு மேலாக அஜித்-விஜய் போட்டி நடிகர்களாக பார்க்கப்பட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் விஜய் தனக்கு யாரும் போட்டி இல்லை எனக் கூறியது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. ஆகையால் இதற்கு அஜித்தும் பதிலடி தரும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றார்கள். ஆனால் அஜித் எந்தவித ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டார். ஆகையால் வீடியோ மூலம் தனது ரசிகர்களுக்கு ஏதாவது செய்யலாம் என்பது அவர்களின் ஆசையாக இருக்கின்றது.