தர்ஷா குப்தா கதறி அழுத வீடியோ வைரலாகி வருகின்றது.
பிரபல நடிகை சன்னி லியோன் மற்றும் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓ மை கோஸ்ட். இத்திரைப்படத்தை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார். இந்த படம் வரலாற்று பின்னணியில் ஹரார் காமெடி திரைப்படமாக தயாராகி இருக்கின்றது. இப்படத்தில் நடிகர் சதீஷ் உடன் இணைந்து தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி பி முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா அண்மையில் நடந்தது. இந்த விழாவை முடித்து விட்டு வெளியில் வந்த தர்ஷா குப்தா நான் அப்படி என்ன செய்தேன்? அவர் என்னை ஏன் அப்படி ப்ரொஜெக்ட் செய்கின்றார்? என தேம்பி தேம்பி அழுதார்.
இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது, நான் நடந்து வந்த போது என்னுடைய ஆடையை யாரோ மிதித்து விட்டார் என நான் திரும்பி பார்த்ததை என்னுடைய அசிஸ்டன்ட்டை நான் திட்டியதாகவும் நான் திமிரு பிடித்தவள் என்பது போலவும் போட்டிருந்தார்கள். ஆனால் அது என் தம்பி. அவனுக்கு தெரியும் நான் அவனிடம் எப்படி பழகுகின்றேன் என்று. இது தெரியாமல் பேசுவது வருத்தமாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார். இந்த சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.