Categories
தேனி மாவட்ட செய்திகள்

புதிதாக அமைக்கப்பட்ட சோலார் மின் மோட்டார்கள்… ஆட்சியர் ஆய்வு..!!!

தேனி மாவட்ட ஆட்சியர் சோலார் மின் மோட்டார் செயல்பாடு பற்றி ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்டத்திலுள்ள பூமழைக்குண்டு, வேப்பம்பட்டி ஊராட்சியில் வேளாண்மை பொறியியல் துறை சார்பாக சோலார் மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இதன் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது வேளாண்மை துறை சார்பாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது.

சோலார் மின் மோட்டார் மூலம் சுமார் 8 மணி நேரம் பாசனத்திற்கு தடையில்லாமல் தண்ணீர் பாய்ச்ச முடியும். மோட்டார்கள் பெற மாநில அரசு 40 சதவீதம், மத்திய அரசு 30 சதவீதம் மானியம் வழங்குகின்றது என தெரிவித்திருக்கின்றார்.

Categories

Tech |