போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 535 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லவன் சாலையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முன்தினம் பல வருடங்களாக வலுவையில் இருக்கும் பண பயன்கள், பஞ்சபடி, பணிக்கொடை, வருங்கால வைப்புநிதி, ஓய்வூதியத்தொகை உள்ளிட்டவை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது அவர்களில் சில அரை நிர்வாணத்தில் இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு உடலில் நாமத்தை வரைந்து பிச்சை எடுத்தும் நூதன முறையில் போராட்டம் மேற்கொண்டார்கள். பல்லவன் சாலையில் இருந்து அண்ணாசாலையை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றார்கள்.
ஆனால் போலீசார் அவர்கள் அண்ணாச்சாலைக்கு வந்து விடாதபடி தடுப்பு வேலி அமைத்தார்கள். இருப்பினும் வேலியை மீறி உள்ளே வர முயற்சித்தனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடுப்பு வேலியை தாண்டி தொழிலாளர்கள் அண்ணா சாலைக்கு வந்ததோடு படுத்துக்கொண்டும் சாலையில் அமர்ந்தும் மறியலில் ஈடுபட்டார்கள்.
மேலும் அங்கு வந்த போலீஸ் அதிகாரிகளின் காலில் விழுந்து கோரிக்கைகளை நிறைவேற்ற சொல்லுங்கள் என கெஞ்ச படி வேண்டுகோள் விடுத்தனர். இதன் பின் போலீசாரின் தடுப்பு வேலியை மீறி சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் போலீசார் தொழிலாளர்கள் 35 பேர் என 535 பேரை கைது செய்து பேருந்தில் ஏற்றினார்கள்.