Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

25,000 லஞ்சம் கேட்ட VAO…. பதுங்கி இருந்த போலீசார்… அதிரடியாக கைது..!!!

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசியை அடுத்திருக்கும் புலிவாய் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மனைவி எல்லம்மாள். இவர் தனது குடும்பத்துடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் அருகே வசித்து வருகின்றார். இவருக்கு சென்ற 2008 ஆம் வருடம் ஒரு ஏக்கர் 6 சென்ட் நிலத்தை இவரது தந்தை தான செட்டில் ஒன்றாக கொடுத்திருக்கின்றார்.

இந்த நிலத்திற்கான பட்டா இவரின் பெயரில் இருந்திருக்கின்றது. இந்த நிலையில் 36 சென்ட் மட்டும் இவருக்கு தெரியாமல் வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றப்பட்டிருக்கின்றது. இது பற்றி அறிந்த எல்லம்மாள் சென்ற செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி வந்தவாசியில் இருக்கும் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

இதை அடுத்து பட்டாவை மீண்டும் எல்லம்மாள் பெயருக்கு மாற்ற வேண்டும் என்றால் 25 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் தனபால் கேட்டிருக்கின்றார். இது பற்றி எல்லம்மாள் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்து இருக்கின்றார். அதன் பேரில் ரசாயனம் தடவிய 25 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எல்லம்மாள் தாலுகா அலுவலகத்தில் தனபாலிடம் கொடுக்கும்போது அங்கு மறைந்திருந்த போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையிலான போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தார்கள். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வரப்படுகின்றது.

Categories

Tech |