Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தங்கம், வெள்ளி, சில்வர் பாத்திரம்… தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்த இளைஞர்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!!

தீபாவளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டவருக்கு 5 வருட சிறை தண்டனையும் இழப்பீடு தொகையை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள டவுன் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சென்ற 2018-19 ஆம் வருடத்திலிருந்து தீபாவளி சீட்டு நடத்தினார். இவர் தீபாவளி சீட்டில் 2 கிராம் தங்கம், 25 கிராம் வெள்ளி, அரை கிலோ இனிப்பு, பட்டாசு பெட்டி, பித்தளை, சில்வர் பாத்திரம் வழங்குவதாக கூறினார். இதனால் ஏஜெண்டுகள் மூலம் சுமார் 204 பேரிடம் 600 என்ற முறையில் சீட்டு பணம் வசூல் செய்யப்பட்டது.

இதன் மூலம் கார்த்திகேயனுக்கு 14 லட்சத்து 68 ஆயிரத்து 800 கிடைத்துள்ளது. இதனை மோசடி செய்து அவர் தலைமுறை ஆகிவிட்டார். இது பற்றி சீட்டு பணம் வாங்கி தந்த ஏஜென்ட்கள் திருவண்ணாமலை மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு தந்தனர். மேலும் ஆவூர் கிராமத்தைச் சேர்ந்த மரகதம் என்பவர் புகார் கொடுத்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அவரை கைது செய்தார்கள்.

இந்த வழக்கானது நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் சீட்டு நடத்தி மோசடி செய்த கார்த்திகேயனுக்கு 5 வருடங்கள் சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அபராத தொகைகளை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க 13,84,000 திருப்பி ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து போலீசார் கார்த்திகேயனை வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றார்கள்

Categories

Tech |