Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நீர் போற இடத்தில எல்லாம் மக்களுக்கு வீடு…!” காகித ஓடம் மிதக்க விட்டு போராட்டம்… சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!!!

குடிசை வீட்டை சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீரில் காகித ஓடம் மிதக்க விட்டு பொதுமக்கள் போராட்டம்.

புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி வசித்து வருபவர்களை நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அரசு காலி செய்ய வலியுறுத்தியது. அதன்படி திருப்பூர் மாநகராட்சியில் 35 வருடங்களுக்கு மேலாக வசித்து வந்த 37 வீடுகளில் இருக்கும் 100-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேறினர். மேலும் அவர்கள் மாற்று இடம் கேட்டு வீட்டு மனைக்கு விண்ணப்பித்திருந்தார்கள். இதில் இடம் தேர்வு செய்யப்பட்டு இடம் கேட்டு விண்ணப்பித்த 21 பேருக்கு தலா ஒரு சென்ட் வீதம் காங்கேயம் சாலை, சென்னிமலை பாளையம், வஞ்சியம்மன் கோவில் அருகே அதிகாரிகள் முன்னிலையில் இடம் வழங்கப்பட்டது.

இவர்கள் சென்ற 9 மாதமாக குடிசை அமைத்து வசித்து வருகின்றார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலம் நீர்நிலை புறம்போக்கு என சொல்லப்படுகின்றது. மழைக்காலங்களில் அவ்வழியாகத்தான் மழைநீர் செல்லும் பாதையாக இருக்கின்றது. இதனால் வஞ்சியம்மன் கோவில் அருகே இருக்கும் குட்டையில் நீர் அதிகரித்து நிரம்பி 21 பேருக்கு வழங்கப்பட்ட நிலத்தில் குலம் போல் நீர் தேங்கியுள்ளது. இதனால் அங்கு வசிப்போர் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள்.

இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக மழை நீரில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காகித ஓடம் செய்து மழை நீரில் விட்டு தங்களின் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றார்கள். மேலும் இதனை அதிகாரிகள் கருத்தில் கொண்டு நீர் தேங்கி நிற்காதவாறு வாய்க்கால் அமைத்து அந்த பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |