கரும்பு வெட்டு கூலிகளை சர்க்கரை ஆலைகளே ஏற்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முன் வைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக ஆட்சிரியரிடம் வழங்கினார்கள். இந்த கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்கள். இதில் குறிப்பாக கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை எனவும் ஆட்கள் கிடைப்பதில்லை எனவும் வெட்டுக் கூலியும் அதிகமாக இருக்கின்றது எனவும் தெரிவித்தனர்.
மேலும் கரும்புகளை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணம் கட்ட வேண்டி இருக்கின்றது. இதனால் கரும்பு விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகின்றது. ஆகையால் வெட்டுக் கூலியை சர்க்கரை ஆலைகளே ஏற்க வேண்டும் எனவும் டோல்கேட் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கையை முன் வைத்தார்கள். இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர் குறிப்பிடத்தக்கது.