மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ கடனுதவியை வழங்கினார்கள்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் திட்டத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இதை அடுத்து திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்று 1144 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 46 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டிலான கடனு உதவியை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட வருவாய் அதிகாரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், மகளிர் திட்ட இயக்குனர் என பலர் பங்கேற்றனர்.