கொள்ளிடம் ஆற்று மதகுப் பகுதியில் சிக்கிய வாலிபரை தீவிரமாக தேடும் பணி நடந்து வருகின்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கபிஸ்தலம் அருகே இருக்கும் திருவைகாவூர் தெற்கு தெருவில் வசித்து வரும் ரவி என்பவரின் மகன் தினேஷ். இவர் நேற்று முன்தினம் மாலையில் தனது மாடுகளை ஓட்டிக்கொண்டு கொள்ளிடம் ஆற்றுக்கு சென்றிருக்கின்றார். அப்போது மாடு தண்ணீரை தாண்டி செல்வதை பார்த்த தினேஷ் தண்ணீரை கடக்க முயன்றார்.
இதில் தினேஷ் மதகு பகுதியில் சிக்கிக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வராததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்கள். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கொள்ளிடம் ஆற்று மதகுப்பகுதியில் இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.