Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல்”.. கோட்டவயல் ரவி வெற்றி..!!!!

கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கால்வாய் நீரினை பயன்படுத்துவோர்க்கான சங்க தேர்தல் தமிழ்நாடு பாசனதாரர்கள் நீர் பாசன அமைப்பு சார்பாக நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இந்த தேர்தலை உதவி ஆட்சியர் தேர்தல் அதிகாரியாக இருந்து நடத்தினார். மேலும் உதவி அதிகாரியாக விக்னேஸ்வரன் இருந்தார்.

இந்த வாக்குப்பதிவானது காலை 6 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெற்றது. இதற்காக 21 பூத் அமைக்கப்பட்டிருந்தது. இதில் வாக்களிக்க 34 கன்மாய் நீர்நிலை பயன்படுத்தும் 4500 பேர் தகுதியானவர்கள். இந்த தேர்தலில் இரண்டு பேர் போட்டியிட்டனர். மேலும் 671 வாக்குகள் பதிவானது. இதில் போட்டியிட்ட கோட்டவயல் ரவி 376 வாக்குகளும் முப்பையூர் வேலு 289 வாக்குகளும் பெற்றனர். இதில் ஆறு ஓட்டுகள் செல்லாதவை. இறுதியாக கோட்ட வயல் ரவி வெற்றி பெற்றார்.

Categories

Tech |