Categories
சினிமா தமிழ் சினிமா

மக்கள் தரமான படத்தை பார்த்திருந்தா நான் இன்னும் 50 படம் எடுத்திருப்பேன்… ஆனால்…? ஆதங்கத்தை வெளிப்படுத்திய இயக்குனர்…!!!

இயக்குனர் தங்கர் பச்சான் பேட்டியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா, கௌதம் மேனன், அதிதி பாலன் நடிப்பில் சங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “கருமேகங்கள் கலைகின்றன”. இத்திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்க லெனின் ஒளிப்பதிவு செய்துள்ளார். தங்கர் பச்சான் பேட்டி அளித்த போது எப்போதும் ஒரு தரமான படைப்பு, தனக்கு தேவையானதை தானே தேடிக் கொள்ளும். அதுபோலத்தான் கருமேகங்கள் கலைகின்றன திரைப்படமும் இருக்கின்றது.

இத் திரைப்படம் ஏதோ ஒன்றை செய்யப் போகின்றது என்பது மட்டும் உறுதி. இத்திரைப்படத்தை மார்ச் மாதம் ரிலீஸ் செய்ய இருக்கின்றோம். தரமான படங்களை மக்கள் திரையில் பார்த்து இருந்தால் நான் இன்னும் 50 படங்கள் எடுத்திருப்பேன். ஆனால் மசாலா படங்களை மட்டுமே திரையில் காண விரும்புகின்றார்கள். இந்த மனநிலை மக்களிடையே மாற வேண்டும் என்பது எனது வேண்டுகோள் என பேசியுள்ளார்.

 

Categories

Tech |