சிம்புவின் ஐம்பதாவது திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள் என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. அண்மையில் வெந்து தணிந்தது காடு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இத்திரைப்படத்திற்கு முன்னதாகவே பத்து தல திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு. இப்படத்தை சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இயக்க சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், டிஜே மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். அண்மையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தார்கள்.
தற்போது இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகின்றது. இந்த படம் சிம்புவின் 48வது திரைப்படம் ஆகும். இதை அடுத்து சிம்பு 49-வது திரைப்படத்தில் நடித்த பிறகு 50-வது திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாக இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. மேலும் இத்திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் அல்லது சுதா கொங்காரா இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.