கீதாஞ்சலி பகிர்ந்த புகைப்படங்களில் செல்வராகவனின் புகைப்படம் இடம்பெறவில்லை.
தமிழ் சினிமா உலகின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் சென்ற 2006ம் வருடம் நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார். பின் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்தனர். பிறகு தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.
தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்.
— selvaraghavan (@selvaraghavan) December 27, 2022
அண்மையில் செல்வராகவன் ட்விட்டர் பதிவு ஒன்றை பகிர்ந்தார். அதில் “தற்போது தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்” என பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு சிலர் உண்மைதான் எனவும் சிலர் என்ன ஆச்சு நீங்களும் விவாகரத்து செய்ய போறீங்களா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றார்கள். அண்மையில் இவரது தம்பியும் நடிகருமான தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து செய்த நிலையில் இவரின் பதிவை பார்த்தவர்கள் இந்த கேள்வியை எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் கீதாஞ்சலி தனது இன்ஸ்டா பக்கத்தில் புத்தாண்டுக்கான புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்து இருக்கின்றார். இதில் அவரின் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் மட்டுமே இருக்கின்றது. அதில் செல்வராகவனின் புகைப்படம் இடம்பெறவில்லை. ஆனால் 2022-ன் கடைசி வெள்ளிக்கிழமை எனவும் இந்த வருடம் வேடிக்கையாக குடும்பத்தினருடன் அற்புதமான கழிகின்றது என பதிவிட்டிருக்கின்றார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றார்கள்.
View this post on Instagram