Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

#ThunivuTrailer: வெளியானது “துணிவு” ட்ரைலர்…. மரண மாஸ் வீடியோ உள்ளே!!

நடிகர் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகும் துணிவு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று இருக்கின்றது.

இத்திரைப்படத்திலிருந்து வெளியான சில்லா சில்லா பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதன்பின் இரண்டாவதாக வெளியான காசேதான் கடவுளடா பாடலுக்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது. இதன்பின் மூன்றாவது பாடலான கேங்ஸ்டா பாடல் வெளியானது. சீண்டுனா சிரிப்பவன், சுய வழி நடப்பவன் என்ற வரிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. நேற்று படக்குழு ட்ரைலர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் எனவும்,  அஜித்தின் கேரக்டர் என்னவென்பது அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

Categories

Tech |