இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து முக்கிய பிரபலம் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு பிறகு ஆறாவது சீசன் ஆரம்பமாகி தற்போது முடிவுக்கு வரவிருக்கின்றது. பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
அந்த எபிசோடு மிகவும் நன்றாக இருந்தது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் எலிமினேஷனுக்கு அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா, அமுதவாணன், ஏடிகே, மணிகண்டா உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டார்கள். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் மணிகண்ட ராஜேஷ் வெளியேறி உள்ளாராம்.