Categories
சினிமா தமிழ் சினிமா

“பீஸ்ட் மோடில் துணிவு”… நக்கலடித்து வாழ்த்தும் விஜய் ரசிகாஸ்..!!!!

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று இருக்கின்றது.

இந்நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இதற்கு ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் விஜயின் பீஸ்ட் திரைப்படத்துடன் ஒப்பிட்டு ரசிகர் மீம்ஸ் போட்டு இருக்கின்றனர். அதில் பீஸ்ட் படத்துல மிலிட்டரி என்றால் இங்க போலீசு, அங்கே ஜெட் சண்டை என்றால் இங்கே படகு சண்டை, அங்க மால் கடத்தலுன்னா இங்க வங்கி கடத்தல். ஆனா அது பீஸ்ட், இது தல-யின் துணிவுடா என நக்ககலாக பதிவிட்டு இருக்கின்றார். மற்றொருவர் வீட்ல ஹைஷாக் பண்ற ஆளுங்க வேற… ஆனா இதுல பேங்க்-அ ஹைஷாக் பண்றதே எங்க தல டா என பதிவிட்டு இருக்கின்றார்.

Categories

Tech |