Categories
தேசிய செய்திகள்

“94 முறை தேர்தலில் களம் கண்ட முதியவர்!”…. தோல்வியை மட்டுமே சந்தித்து சாதனை….!!!!

டெல்லியில் உள்ள ஆக்ராவில் வசித்து வரும் ஹஸ்னூராம் அம்பேத்கர் என்ற நபர் இதுவரை 94 முறை தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளார். இருப்பினும் அவர் தற்போது உ.பியில் நடைபெற உள்ள தேர்தலிலும் போட்டியிட இருக்கிறார். ஆனால் அந்த நபர் பல தேர்தல்களில் போட்டியிட்டும் இதுவரை வெற்றி வாய்ப்பை மட்டும் பெறவே இல்லை.

அதாவது அந்த நபர் சுமார் 100 தேர்தலில் போட்டியிட்டு அதில் தோல்வியை சந்திக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளாராம். கடந்த 1985-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை நடந்த சிறிய மற்றும் பெரிய தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்துள்ளார். இதுவரை இவருக்கு எந்த கட்சியும் சீட் வழங்கவில்லை. இவர் சுயேட்சையாக தான் தேர்தலில் போட்டியிட்டு வருகிறார்.

அதற்கு காரணம் இவர் கடந்த 1985-ல் ஒரு கட்சியில் சீட் கேட்டிருக்கிறார். ஆனால் அந்த கட்சியினர் உங்களுக்கு ஒரு ஓட்டு கூட விழாது என்று கூறி அவரை அவமானப்படுத்தி இருக்கின்றனர். அந்த நாள் முதல் இவர் அனைத்து தேர்தல்களிலும் சுயேச்சையாக தான் போட்டியிட வேண்டும் என்று களம் இறங்கியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் இவர் வார்டு கவுன்சிலர் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை அனைத்திலும் போட்டியிட்டு தோல்வியை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |