ஆஸ்கார் விருதுகள் வென்றோரின் முழு பட்டியல்.
ஹாலிவுட் சினிமா நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் உரிய கவுரவத்தை வழங்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டதுதான் அகடமி அவார்டு என்கிற இந்த ஆஸ்கர் விருது. 1929ஆம் ஆண்டு மே 16ம் தேதி ஹாலிவுட்டின் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் நடந்த முதல் விருது விழாவில் பார்வையாளர்களாக கலந்து கொண்டவர்கள் 270 பேர். அப்போது தெரியாது இவ்வளவு பிரமாண்டமாக உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் விருது விழாவாக இது எதிர்காலத்தில் இருக்குமென்று.
இந்நிலையில் 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஹாலிவுட்டின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை ஏமி ஷூமர், வாண்டா லைக்ஸ் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இவ்விழாவில் ஆஸ்கர் விருது வென்றோரின் பட்டியல் : சிறந்த படத்திற்கான விருதை “கோடா” வென்றுள்ளது. சிறந்த இயக்குனருக்கான விருதை “ஜேன் கேம்பியன்” வென்றுள்ளார். சிறந்த நடிகருக்கான விருதை “வில் ஸ்மித்” வென்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதை “ஜெஸிகா சாஸ்டெய்ன்” வென்றுள்ளார். சிறந்த துணை நடிகைக்கான விருதை “அரியானா டிபோஸ்” வென்றுள்ளார். சிறந்த துணை நடிகருக்கான விருதை “ட்ரான் கோட்சுர்” வென்றுள்ளார். அசல் திரைக்கதைக்கான விருதை “பெல்ஃபாஸ்ட்” வென்றிருக்கின்றது. சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதையும் சிறந்த எடிட்டிங்கான விருதையும் ‘ட்யூன்’ படம் பெற்றிருக்கின்றது. சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை “என்கேன்டோ” திரைப்படம் வென்றுள்ளது.