நாட்டின் இறையாண்மைக்கு எதிராக போலி செய்திகளை வெளியிட்ட 94 youtube சேனல்கள், 19 சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மேல் சபையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மந்திரி அனுராக் தாகூர் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக போலி செய்திகளை வெளியிடும் அமைப்புகள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கின்றது. அந்த வகையில் 2021-22 ஆம் ஆண்டில் தவறான தகவல்களையும் போலி செய்திகளையும் வெளியிட்ட 94 youtube சேனல்கள், 247 வலைதள முகவரிகள், 19 சமூக வலைதள கணக்குகள் ஆகியவை முடக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப சட்டம் 69 ஏ பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுப் பிரச்சினை தொடர்பாக போலி செய்திகளை கண்டறிந்து உண்மைத் தகவல்களை தெரிவிக்க பத்திரிக்கை தகவல் மையத்தில் தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.