தேசிய அளவில் நடத்தப்பட்ட மக்கள் நீதிமன்றதில் 95 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடந்துள்ளது. இதில் நீதித்துறை நடுவர் எம். காளிமுத்து, மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜி. மாலதி, ஓய்வுபெற்ற நீதிபதிகள் ராமலிங்கம், நந்தன் மற்றும் சார்பு நீதிபதி ஆனந்தன் போன்றோரும், வாணியம்பாடியில் இருக்கும் இரு வழக்கறிஞர் சங்கங்கள் சார்பாக வழக்கறிஞர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இதனை அடுத்து மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில் சார்பு நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆகிய 3 நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கின்ற வழக்குகளில் 95 வழக்குகளுக்கு சமரசம் செய்யப்பட்டு 2,26,10,900 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் மக்கள் நீதிமன்றம் மூலமாக மக்களுக்கு விரைந்து வழக்குகள் முடித்து வைக்கப்படுவதால் பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தை நாடி வருவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.