Categories
உலக செய்திகள்

95.8% நல்ல பலன் தருது.. தடுப்பூசியை ஆய்வுசெய்த இஸ்ரேல்… வெளியிட்ட முக்கிய தகவல்…!

பைசர் தடுப்பு மருந்து கொரோனாவிடமிருந்து தப்பிப்பதற்கு 95.8 சதவீதம் பயனுள்ளதாக உள்ளது என்று இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சுமார் 212 தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதில் சில மருந்துகள் மற்றும் அவசரகால தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. இஸ்ரேலில் இதுவரை 4.25 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் பைசர் தடுப்பு மருந்து கொரோனாவிடமிருந்து 95.8%  பயன் தருவதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசி 99.2சதவீதம் கடுமையான நோய் தொற்று பாதிப்பிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்க உதவுகிறது என தெரிவித்துள்ளனர். மேலும் 98.9 சதவீத உயிரிழப்பை தடுப்பதாகவும் தெரியவந்துள்ளது.

Categories

Tech |