இத்தாலியில் 96 வயது முதியவர் ஒருவர் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
சிறுவயதில் தங்களது குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாமல் பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றவர்கள் வளர்ந்து தான் சேமித்து வைத்த பணத்தில் மீண்டும் படிப்பைத் தொடர நினைத்து, அதில் வெற்றியும் கண்ட செய்திகளை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில்,
இத்தாலியில் 96 வயதில் பட்டம் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் கியூசெப் பட்டர்னோ என்ற முதியவர். இவர் குடும்ப வறுமை காரணமாக இளமை வயதில் படிப்பை நிறுத்திவிட்டு, தனது 90 வயதில் தான் கல்லூரியில் சேர்ந்துள்ளார். வரலாறு மற்றும் தத்துவத்தில் 6 ஆண்டுகள் படித்து தற்போது பல்கலைக்கழக பட்டம் பெற்றுள்ளார். பட்டம் பெற்ற இவர் படிப்பு என்னும் லட்சியத்தை அடைய வயது தடையில்லை என்று தெரிவித்துள்ளார்.