ஈரோடு மாவட்டத்தில் சோலார் அருகே உள்ள சின்னியம்பாளையம் ஊராட்சி பாரதி நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் 96 குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்ததையடுத்து பயனாளிகளுக்கு நேற்று வீடுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணணுண்ணி, மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் குணசேகரன், மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.ப சச்சிதானந்தம், மொடக்குறிச்சி சரஸ்வதி எம்.எல்.ஏ கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் கதிர்வேல், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தனசேகரன், மொடக்குறிச்சி பேரூர் தி.மு.க செயலாளர் சரவணன், உதவி பொறியாளர் பிரசன்னா, சின்னியம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் செல்வகுமார், உதவி நிர்வாக பொறியாளர் சரவணகுமார், நிர்வாக பொறியாளர் வெங்கடேசன் துணை தலைவர் ஆனந்தி பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கு தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு அனைவருக்கும் வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கியுள்ளார். அதன் பின் குடியிருப்புகளை அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும் குடியிருப்புகளுக்குள் இருக்கும் வசதியை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.