அமெரிக்காவில் கொரோனாவை தவிர்த்து மற்ற நோய்களால் மரணங்கள் ஏற்படுவதாக நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளில் அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 60 லட்சத்து 23 ஆயிரத்து 617 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 679 பேர் மரணமடைந்துள்ளனர். ஆனால் உயிரிழந்தவர்களில் 6% மட்டுமே தொற்றினால் உயிரிழந்ததாகவும் மீதமுள்ள 94% மற்ற நோய்களால் ஏற்பட்ட மரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாச செயலிழப்பு, நிமோனியா, உயர் ரத்த அழுத்தம், இதய செயலிழப்பு, நீரிழிவு நோய், சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு போன்ற ஏதேனும் நோய்களில் ஒன்று இருப்பதால் மரணம் ஏற்பட்டு விடுகின்றது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தகவலை அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையமே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.