கார்கிவ் நகரம் மீது ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கிருந்து ரயிலில் செல்ல முயன்ற போது நடந்த தாக்குதலில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்தார். இவர் அங்கு எம்பிபிஎஸ் 4-ஆம் ஆண்டு படித்து வந்தார். எப்படியாவது உக்ரைனின் மேற்கு எல்லைக்கு சென்று வெளியேறலாம் என்று திட்டமிட்ட நிலையில் இந்த சோக நிகழ்வு நடந்துள்ளது. இதற்கிடையில் மாணவர் அங்கு சென்று படித்ததற்கு நீட் தேர்வு தேர்வு தான் காரணம் என்று அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைன் தாக்குதலில் உயிரிழந்த மருத்துவ மாணவர் நவீன் தந்தை, என் மகன் பள்ளி இறுதி தேர்வில் 97 சதவீத மதிப்பெண் எடுத்தும் இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர கோடிக்கணக்கில் பணம் கேட்டார்கள் என்று கூறியுள்ளார். நவீன் உயிரிழந்தது கர்நாடகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் இந்தியர்களை 90 சதவீதம் பேர் இந்திய அரசின் தகுதி தேர்வில் தோல்வியடைவதாக மத்திய அமைச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது.