Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

97 வயது மூதாட்டிக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை…. டாக்டர்களின் சாதனை….!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வடகரை பகுதியில் சங்கிலிமாடன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இசக்கியம்மாள்(97) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த மூதாட்டி வீட்டில் நடந்து செல்லும் போது கால் தவறி கீழே விழுந்ததால் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் மூதாட்டியை தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இதனையடுத்து எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுத்து பார்த்த மருத்துவர்கள் மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு எடுத்தனர்.

அதன்படி கடந்த 7-ஆம் தேதி இடுப்பு எழும்பிற்கு சிறிய துளை மூலம் கம்பி பொருத்தி மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். தற்போது மூதாட்டி நலமாக இருக்கிறார். இந்நிலையில் தென்காசி நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா, மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ஆகியோர் சிக்கலான எலும்பு முறிவு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்த மருத்துவர்களை பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |