Categories
உலக செய்திகள்

நெஞ்சை உலுக்கிய சம்பவம்…. 97 குழந்தைகள் பலி…. வருத்தத்தில் உக்ரைன் அதிபர்….!!

ரஷ்யா நடத்திய தாக்குதலில் 97  குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா உக்ரைன்  இடையிலான போரானது இன்று 20வது நாளாக நீடித்து வருகிறது.  ரஷ்ய ராணுவ படையானது உக்ரேனின் பல இடங்களை கைப்பற்றிய போதும், தலைநகரான கிவ்வை கைப்பற்ற சிரமப்பட்டு வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் தங்களால் ஆன முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் ரஷ்யா உக்ரைன் மீதான போரை தொடர்ந்து நடத்திக் கொண்டே இருக்கிறது. மேலும் ரஷ்ய ராணுவ படையானது பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள், குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன. இதனால் உக்ரைன் தலைநகரான கிவ்வில் நேற்று இரவில் இருந்து முழு ஊரடங்கு செயல்படுத்த மேயர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது நடத்திய போரில் 97 குழந்தைகள் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

Categories

Tech |