Categories
உலக செய்திகள்

97 பேரின் கதி ? ”குடியிருப்பில் பாய்ந்த விமானம்” பதறவைக்கும் வீடியோ ….!!

பாகிஸ்தான் கராச்சி விமான நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

பாகிஸ்தான் நாட்டில் லாகூரில் இருந்து 97 பேருடன் வந்த ஏர்பஸ் ஏ320 ரக விமானம் கராச்சி  விமான நிலையத்தில் தரையிறங்கும் போது அங்குள்ள குடியிருப்பில் விழுந்து விபத்துக்குள்ளானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானத்தில் 85 பயணிகளும், 12 விமான பணி குழுவினரும் சேர்த்து 97 பேர் பேர் இருந்துள்ளனர். கராச்சி விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு சற்று முன்னதாக விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக விமானி கூறியதாக முதல்கட்ட தகவல் வந்துள்ளது.

விமானியின் எச்சரிக்கையை அடுத்து உடனடியாக தரையிறங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.இதனால் அந்த பகுதியை சுற்றி வருவதற்கு விமானி முடிவு எடுத்ததாகவும், அந்த பகுதியை சுற்றி வரும் சமயத்தில் தொழில்நுட்ப கோளாறு மிகவும் அதிகமாகி குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி இருக்கிறது  என்றும் சொல்லப்படுகின்றது. விமானத்தில் பயணம் செய்த 97 பேரின் நிலைமை என்ன ஆனது ? என்பது வருந்தத்தக்க செய்தியாகவே இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடிய பகுதியானது குடியிருப்பு பகுதியாகும்.

மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதி என்று அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே குடியிருப்பு வாசிகளுக்கு காயம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்ற ஒரு அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் இரண்டு பேரின் உடல் ஒரு குழந்தை மற்றும் ஓர் இளைஞர் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இது போக ஒரு எட்டு பேர் அந்த இடிபாடுகளில் சிக்கி காயங்களுடன் மீட்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

8 பேரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அந்த குடியிருப்பு பகுதியானது மிகவும் குறுகலான தெருக்களை கொண்ட பகுதியாக இருப்பதால் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் இருப்பதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.பாகிஸ்தான் இராணுவம் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் போன்ற பல்வேறு தரப்பினரும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

குடியிருப்பு பகுதி என்பதன் காரணமாக மக்கள் மிக அதிக அளவில் அந்த பகுதியில் கூடியிருக்கிறார்கள். இதுவும் பணியை மேற்கொள்வதில் ஒரு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.விமானம் விழுந்து நொருங்கிய காட்சி, சேதமற்ற பகுதியை பார்க்கும் போது குடியிருப்பு வாசிகளும் பலர் உயிரிழந்திருக்க கூடும் அஞ்சப்படுகின்றது.

விமானம் விழுந்த காட்சி:

குடியிருப்பு பின்புறம் ஏற்பட்ட புகை மண்டலம்:

விபத்து நடந்த இடம்:

விபத்து நடந்த இடம் – 2 :

https://twitter.com/PAPA__Tweets/status/1263806715549683713

விபத்து நடந்த இடத்தை மற்றொரு விமானத்தில் இருந்து பார்த்த படம்:

விபத்து ஏற்பட்ட இடம்:

https://twitter.com/AF2311/status/1263804039030022145

https://twitter.com/NP_Defenders/status/1263813206339919875

Categories

Tech |