ஸ்பெயின் நாட்டில் அதிகரித்த வெப்ப அலை காரணமாக காட்டுத்தீ கடுமையாக பரவி வருவதால் தீயணைப்பு படை தீயை கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக உயிர்பலிகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில் வெப்ப அலையால் காட்டுத்தீ கடுமையாக பரவிக் கொண்டிருக்கிறது. அதனை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
கேட்டலோனியா என்னும் பகுதியில் வீடுகள் இருக்கும் பகுதிக்கு அருகே காட்டுத்தீ தீவிரமாக பரவியுள்ளது. எனவே, உடனடியாக அந்த பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்றி இருக்கிறார்கள். காட்டு தீயில் சுமார் 988 ஏக்கர் பரப்பு கொண்ட காடுகள் தீயில் கருகி சாம்பலானது.