இத்தாலி நாட்டில் 99 வயதுடைய முதியவர் தன்னுடைய 96 வயதுடைய மனைவிக்கு விவாகரத்து கொடுத்துவிட்டார். இவ்வளவு வயதில் எதற்காக அந்த தாத்தா தன்னுடைய மனைவிக்கு விவாகரத்து கொடுத்தார் தெரியுமா? அதாவது அவர்கள் வீட்டின் அலமாரியில் இருந்து முதியவருக்கு ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தை முதியவரின் மனைவி தன்னுடைய கள்ளக்காதலனுக்காக எழுதியுள்ளார். உடனே அந்த முதியவர் தன்னுடைய மனைவியிடம் அந்த கடிதத்தை காண்பித்து இது உண்மையா என கேட்டுள்ளார்.
அதற்கு முதியவரின் மனைவி ஆமாம் நான் என்னுடைய கள்ளகாதலனுக்காக கடிதம் எழுதினேன் என கூறியுள்ளார். ஆனால் இந்த கடிதம் 60 வருடங்களுக்கு முன்பாக எழுதப்பட்டது என கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த முதியவர் தன்னுடைய மனைவிக்கு விவாகரத்து கொடுத்து விட்டார். மேலும் அந்த முதியவரும் அவருடைய மனைவியும் 90 வயதை கடந்து விவாகரத்து பெற்ற உலகின் முதல் தம்பதிகள் என்ற பெயரை பெற்றுள்ளனர்.