9, 10, 11 ஆம் வகுப்பு பயிலும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தபட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதையடுத்து 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதையடுத்து 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று 9, 10, 11 மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி உத்தரவை வெளியிட்டார். இதையடுத்து இந்த அறிவிப்பு சிபிஎஸ்சி மாணவர்களுக்கு பொருந்தாது. சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு தொடர்ந்து தயாராக வேண்டும் என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.