9-12 மாணவர்களுக்கு சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்திலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்துகொண்டு வருகிறது. இதையடுத்து பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பிறகு 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கபட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 9 – 12ம் வகுப்புகளுக்கு வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் திறக்கப்படுகின்றது.
சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. வாரத்தின் 6 நாட்களும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதால் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருத்து மாதத்தில் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமை விடுமுறை விடுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.