கோவையில் 9 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாங்கி ஊழியர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோயம்புத்தூர் செல்வபுரம் பகுதியை அடுத்த தில்லை நகரில் வசித்து வருபவர் ராம்குமார். இவர் அதே பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட பிரபல வங்கி ஒன்றின் கிரெடிட் கார்டு பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதனை அறிந்த ராம்குமார் வீட்டிற்குள் மாணவியின் அனுமதியின்றி நுழைந்து சிறுமி என்றும் பாராமல் கொடூரமாக துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இங்கு நடந்ததை வெளியில் யாரிடமாவது கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
மாணவி தனது பெற்றோர்களிடம் சம்பவம் பற்றி கூறி கதறி அழுதுள்ளார். பின் மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்ததன் அடிப்படையில் ராம்குமார் கைது செய்யப்பட்டு அவர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்பட்டு தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.